Home /News /entertainment /

சுயதீன இசை மீதான பேரார்வம்... தனக்கென யூடியூப் சேனலை தொடங்கிய துருவ் விக்ரம்!

சுயதீன இசை மீதான பேரார்வம்... தனக்கென யூடியூப் சேனலை தொடங்கிய துருவ் விக்ரம்!

துருவ் விக்ரம்

துருவ் விக்ரம்

எனது கேமராவை எடுத்துக்கொண்டு தெருக்களில் சுற்றித் திரிவேன். கீபோர்டில் சீரற்ற டியூன்களை வாசிப்பேன், குளிக்கும் போது என் சொந்த ட்யூன்களைப் பாடுவேன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தனக்கென புதிய யூடியூப் சேனலை தொடங்கி, தனது இண்டிபென்டென்ட் இசை ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் துருவ் விக்ரம். 

    நடிகர் துருவ் விக்ரம், இறுதியாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் 'மஹான்' படத்தில் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே நேற்று தனது சொந்த யூடியூப் சேனலைத் தொடங்கிய அவர், சுயாதீன இசையில் தான் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இசை மீது தனக்கு பேரார்வம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ட்ரீம்ஸ்/கனவுகள் என்ற தலைப்பில் துருவ் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது குழந்தை பருவத்தில் இருந்து ஏற்பட்ட இசையின் தாக்கம், அவரது வாழ்க்கை பற்றி பேசுகிறார். சுயதீன இசையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ள துருவ் விக்ரம், "நான் எப்போதும் நிறைய கனவு காண்பேன். என் குழந்தை பருவத்தில், நான் ஒரு நடிகனாக வேண்டும் என்று கனவு கண்டேன். ஒரு நடிகராக, இசையமைப்பாளராக, திரைப்பட இயக்குநராக, ராக் ஸ்டாராக வேண்டும் என்று நிறைய கனவு கண்டேன். இந்த கனவுகள் மட்டுமே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது, ஏனென்றால் என் எண்ணங்களைச் செயல்படுத்த நான் மிகவும் பயந்தேன், என் கனவுகள் போதும் என்று உணர்ந்தேன்.

    பள்ளி நாட்களில் எனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இல்லை. அப்படியெனில், நான் கிளாஸ் டாப்பரா? என்றால், வாய்ப்பே இல்லை. எல்லாவற்றிலும் எனக்கு ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக அம்மா என்னை எல்லா வகுப்புகளிலும் சேர்த்துவிடுவார். நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, ஷ்லோகா வகுப்பு, கணினி வகுப்பு என நீங்கள் எந்த வகுப்பைப் பற்றி நினைத்தாலும் அங்கு நான் இருந்திருப்பேன்.

    பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர்!



    நான் அடிக்கடி என் எண்ணங்களில் தொலைந்து போவேன். ஆனால் வகுப்புக்கு சென்ற எதிலும் ஆர்வமாக இருந்ததாக உணரவில்லை. அதற்கு பதிலாக நான் திரைப்படங்களைப் பார்ப்பேன், எனது கேமராவை எடுத்துக்கொண்டு தெருக்களில் சுற்றித் திரிவேன். கீபோர்டில் சீரற்ற டியூன்களை வாசிப்பேன், குளிக்கும் போது என் சொந்த ட்யூன்களைப் பாடுவேன். நான் தனியாக இருக்கும்போது என் கற்பனையில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் உருவாக்குவேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    என் இதயம் சொல்ல விரும்பும் கதைகள், பாடல்கள், என் யூடியூப் சேனலில் சொல்ல விரும்புகிறேன். என் பார்வையில், என் இதயம் மற்றும் என் ஆன்மா, உங்கள் திரையில். நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். விரைவில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Dhruv Vikram

    அடுத்த செய்தி