ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தொடக்கமே மாஸ்! விஜய், மகேஷ் பாபுவை குறி வைக்கும் தோனி!? பக்கா பிளானில் தலயின் தயாரிப்பு நிறுவனம்!

தொடக்கமே மாஸ்! விஜய், மகேஷ் பாபுவை குறி வைக்கும் தோனி!? பக்கா பிளானில் தலயின் தயாரிப்பு நிறுவனம்!

தோனி, விஜய், மகேஷ் பாபு.

தோனி, விஜய், மகேஷ் பாபு.

ஒவ்வொரு மொழியிலும் சில டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து விஜய்யுடன் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் மகேஷ் பாபு படங்களை கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களைத் தவிர சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விளையாட்டு உலகில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக தோனி இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் தோனி ஆக்டிவாக இல்லாவிட்டாலும்கூட அவரை பின்தொடர்வோர், அவரது ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கிரிக்கெட்டில் அவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பதற்காக சினிமா உலகில் தோனி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளார். அந்த வகையில், அவருடைய தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சார்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன.

அந்த வகையில் ஒவ்வொரு மொழியிலும் சில டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து விஜய்யுடன் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சம்மதம் தெரிவித்த விஜய், தற்போது உள்ள படங்களை முடித்துவிட்டே இந்தப் படத்தில் நடிக்க முடியும் என்றும் தோனியிடம் சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனை தொடர்ந்து விஜய் தனது 68-வது படத்திற்கு இயக்குநர் அட்லியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தெரியவுள்ளது. அதனை ஏஜிஎஸ் நிறுவனம் தாயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also read... விக்கி - நயன் தம்பதியை வாழ்த்தி கடிதம் அனுப்பிய கார்த்தி!

இந்நிலையில் சென்னையில் அலுவலகம் திறக்க தோனியின் தயாரிப்பு நிறுவனம் விறுவிறுப்பாக வேலை செய்து வருவதாகவும் அடுத்ததாக விஜயின் 70-வது படத்தை தோனி தயாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

விஜய் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவைத் தவிர, தோனியின் வரிசையில் உள்ள மற்றவர்கள் கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த கிச்சா சுதீப் மற்றும் பிருத்விராஜ் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Dhoni, Mahesh babu