முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'லவ் டுடே' நாயகி.. ஹரிஷ் கல்யாண் ஹீரோ.! முதல் படத்தை அறிவித்த தோனி தயாரிப்பு நிறுவனம்!

'லவ் டுடே' நாயகி.. ஹரிஷ் கல்யாண் ஹீரோ.! முதல் படத்தை அறிவித்த தோனி தயாரிப்பு நிறுவனம்!

தோனி

தோனி

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்புகள் வெளியாகின.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் நடிகர் ஹரிஷ் கல்யாணை வைத்து தயாரிக்கும் படத்திற்கு 'எல்.ஜி.எம்' (Lets Get Married) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உலகில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக தோனி இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் தோனி ஆக்டிவாக இல்லாவிட்டாலும்கூட அவரை பின்தொடர்வோர், அவரது ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கிரிக்கெட்டில் அவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்.

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முதல் திரைப்படத்தை தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 'எல்.ஜி.எம்' (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளது. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே நாயகி இவானா, யோகி பாபு ஆகியோர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read...  'ரஜினிகாந்தையே மிரட்டியவர்.. சூப்பர் ஸ்டார் என்பது நல்ல மனசுக்காக' - ஒய்.ஜி.மகேந்திரன் நெகிழ்ச்சி பேச்சு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Harish kalyan, Dhoni