முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தோனி தயாரிக்கும் படம் குறித்த முக்கிய அறிவிப்பு - என்னவாக இருக்கும்?

தோனி தயாரிக்கும் படம் குறித்த முக்கிய அறிவிப்பு - என்னவாக இருக்கும்?

தோனி

தோனி

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிக்கெட் வீரர் தோனி தன்னுடைய பெயரில் புதிதாக சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.  அதில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புதிய திரைப்படங்களைத் தயாரிக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார்.  அந்த வகையில் அவர் முதல் திரைப்படத்தை தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாரிக்கிறார்.

இதற்கான செய்தியை ஏற்கனவே நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வெளியிட்டு இருந்தது.  இந்த நிலையில் அந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகிறது. ஹரிஷ் கல்யாண் - தோனி கூட்டணியில் உருவாக அந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே தோனி நடிப்பில் அதர்வா என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி உருவாக்கியிருந்தார்.  கிராபிக்ஸ் வகையில் உருவாகி இருக்கும் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.  இந்த நிலையில் தன்னுடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்க ரமேஷ் தமிழ் மணிக்கு, தோனி வாய்ப்பு வழங்கியுள்ளார்.  தோனி நிறுவனத்தில் ரமேஷ் தமிழ்மணி முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Dhoni