முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சுந்தர் சி. படத்தில் இணைந்த தொகுப்பாளினி டிடி!

சுந்தர் சி. படத்தில் இணைந்த தொகுப்பாளினி டிடி!

சுந்தர் சி. படத்தில் இணைந்த டிடி

சுந்தர் சி. படத்தில் இணைந்த டிடி

கலகலப்பு 2 படத்தை போன்று மூன்று நாயகர்களை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி. ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

  • Last Updated :

சுந்தர் சி இயக்கி வரும் புதிய படத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஜெய், ஜீவா ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.

கலகலப்பு 2 படத்தை போன்று மூன்று நாயகர்களை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி. ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் அவர் ஜெய், ஜீவாவின் சகோதரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. குடும்பம், சகோதரர்கள் சகோதரிகள், அவர்களுடைய காதலர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் ஆள்மாறாட்டம் என இந்தப் படத்தை சுந்தர் சி எடுத்து வருகிறார். ஊட்டியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Also read... ஆதிவாசி தலைவரின் கதையை இந்தியில் படமாக்கும் இரஞ்சித்

திவ்யதர்ஷினி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், குஷ்பு மேடம் எப்போது ஜாயின் பண்ண போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் இந்த படத்தில் குஷ்பு நடிக்கலாம் என்று தெரிகிறது. படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கிறது. சுந்தர் சி எழுதி இயக்குகிறார். ஊட்டியிலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்குகின்றனர்.

First published:

Tags: Dhivyadharshini, Sundar.C