முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 20 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் படத்தில் இடம்பெறும் மகாநதி சங்கர்

20 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் படத்தில் இடம்பெறும் மகாநதி சங்கர்

நடிகர் மகாநதி சங்கர்

நடிகர் மகாநதி சங்கர்

ஜான் கோக்கன், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ஏகே 61 படத்தில் இடம்பெற்றுள்ளார்கள். இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அஜித்தின் தீனா படத்தில் இடம்பெற்ற நடிகர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏகே 61 படத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீனா படத்தில் அஜித்தை ‘தல’ என்று அழைத்தவர் நடிகர் மகாநதி சங்கர். இந்த படம் மெகாஹிட் ஆன நிலையில் அஜித்துக்கு தல என்ற அடைமொழி ஏற்பட்டது. தீனா படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.

தீனா படத்திற்கு பின்னர் தல என்ற அடைமொழியை நீண்டகாலம் வைத்திருந்த அஜித், சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜித், அஜித் குமார், ஏகே. என ஏதேனும் ஒரு பெயரை கூறி அழைத்தால் போதும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதையும் படிங்க - விறுவிறுப்பாக நடைபெறும் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு… ஃபோட்டோஸ் பகிர்ந்த விஜய் சேதுபதி

இதனை ஏற்று அவரது வெறித்தனமான ரசிகர்களும் தல என்று கூறுவதை நிறுத்தி விட்டனர். தற்போது அவரை பரவலாக ரசிகர்கள் ஏகே என்று அழைத்து வருகிறார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் தீனா படத்தில் இடம்பெற்ற மகாநதி சங்கர் தற்போது மீண்டும் எச் வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் இடம்பெற்றுள்ளார்.

தல என்ற பட்டத்தை தவிர்த்த பின்னர் ஏகே 61 வெளியாகுவதால், அதில் அஜித்தின் பெயரை ஏகே என்று இருக்குமா? தல என்ற அழைக்க வைத்த மகாநதி சங்கர் இந்தப் படத்தில் ஏகே என்ற அடைமொழியை ஏற்படுத்துவாரா என்று அஜித் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க - ஓடிடியில் 200-வது நாள்… புதிய போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெய்பீம் படக்குழு

எச் வினோத் இயக்கத்தில் வளர்ந்து வரும் அஜித்தின் ஏகே 61 படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் புகழ் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

ஜான் கோக்கன், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள். இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

First published:

Tags: Actor Ajith