Dhayanidhi Alagiri: மகன் பிறந்த விஷயத்தை படத்துடன் பகிர்ந்த தயாநிதி அழகிரி!

தயாநிதி அழகிரி

பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரியை கட்டித்தழுவி வரவேற்றார். அந்தப் படம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

  • Share this:
    தனக்கு மகன் பிறந்திருக்கும் விஷயத்தை புகைப்படத்துடன் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. இவர் இயக்குநர் சி.எஸ்.அமுதனின் தமிழ்படத்தின் மூலம் இளம் தயாரிப்பாளாராக சினிமாவிற்குள் நுழைந்தார். அதற்கடுத்ததாக, மதுரை பின்னணியைக் கொண்ட தூங்கா நகரம், அஜித்தின் மெகா ஹிட் படமான மங்காத்தா என தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தயாரித்தார்.

    தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர், டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் மதுரை ’சூப்பர் ஜெய்ன்ட்’ அணியின் உரிமையாளராகவும் இருந்து கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்புகளையும் கொடுத்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தார். சினிமா, கிரிக்கெட் மட்டுமல்ல, ஃபுட்பால் ரசிகரும்கூட, புத்தக பிரியர் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.



    இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட விழாவில், தயாநிதி அழகிரி, அவரது சகோதரி கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரியை கட்டித்தழுவி வரவேற்றார். அந்தப் படம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

    தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா தயாநிதி. இவர்களுக்கு ருத்ர தேவ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையாக மீண்டும் மகன் பிறந்த விஷயத்தை ட்விட்டரில் அறிவித்திருக்கிறார் தயாநிதி. மனைவி குழந்தையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, குழந்தைகு வேதாந்த் ஏ தயாநிதி எனப் பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: