ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நாளை தொடங்கும் தர்மஷாலா சர்வதேச திரைப்பட விழா... கலந்துகொள்ள நீங்க ரெடியா?

நாளை தொடங்கும் தர்மஷாலா சர்வதேச திரைப்பட விழா... கலந்துகொள்ள நீங்க ரெடியா?

தர்மஷாலா சர்வதேச திரைப்பட விழா

தர்மஷாலா சர்வதேச திரைப்பட விழா

தர்மஷாலா சர்வதேச திரைப்பட விழா இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுதந்திரமான திரைப்படங்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் நோக்கத்தை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • himachal, India

தர்மஷாலா சர்வதேச திரைப்பட விழா 2022 ( DIFF) நவம்பர் 3 - நாளை முதல் ஹிமாச்சலப்பிரதேசத்தில் தொடங்க உள்ளது.

இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் மலைகள், ஏரிகள், சரணாலயங்கள் என்று இயற்கை எழில்கள் இருந்தாலும் 2012 இல் தொடங்கிய இந்த 3 நாள் திரைப்பட விழா இப்பகுதியில் ஒரு முக்கிய சுற்றுலாவிற்கான காரணமாகவே மாறியுள்ளது.

திரைப்பட விழாக்கள் என்பதே சிறந்த திரைப்படங்களை உலகின் மூலைகளில் இருந்து எடுத்து அதை உலகம் முழுவதற்கும் அறிமுகப்படுத்தவதே ஆகும். அப்படி நடத்தப்படும் தர்மஷாலா சர்வதேச திரைப்பட விழா இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுதந்திரமான திரைப்படங்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் நோக்கத்தை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

படம் பார்ப்பதே ஒரு அற்புதமான அனுபவம் அதையும் ஒரு அழகான மலை அமைப்பில் இருந்துகொண்டு நவம்பர் மாதக் குளிரோடு பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். அதை மிஸ் பண்ண யாருக்கு தான் மனம் வரும்?

நடிகர் அஜித் போல பைக் பயணம்... இமயமலையில் எஸ்.ஏ.சந்திரசேகர்!

தொற்றுநோய் பரவல் காரணமாக 2020, ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரே பெரிய திரைப்பட விழா DIFF ஆகும். இதன் புகழ் தெற்காசியா முழுவதும் பரவியதால் இந்த ஆண்டு பல புதிய பார்வையாளர்களின் பங்கேற்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2022 ஆண்டு, DIFF ஒரு கலப்பினப் பதிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் ஆஃப்லைன் பதிப்பு நவம்பர் 3 மற்றும் 6 க்கு இடையில் தர்மஷாலாவில் நடைபெறும். அதே நேரத்தில் ஆன்லைன் நிரல் பார்வையாளர்களுக்கு இந்த மூன்று நாட்கள் தாண்டி கூடுதல் காலம் அணுகக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DIFF, 11வது பதிப்பில், கலந்துகொள்ள உலகம் முழுவதிலுமிருந்து சினிமா-எழுத்தாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை திரைப்பட விழா இன்று எப்படி கிளம்புவது என்று கவலைப்பட வேண்டாம். நமக்கு தான் virtual view room இருக்கிறதே. இப்போதே diff.co.in எனும் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். 3 நாட்கள் திரைப்படங்களோடு ஜமாயுங்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Film Festival, Himachal Pradesh, International Film Festival