Home /News /entertainment /

நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வாத்தி

வாத்தி

நடிகர் தனுஷ், வெங்கி அட்லூரி என்பவர் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகர் தனுஷ், வெங்கி அட்லூரி என்பவர் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு ஐத்தராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. வாத்தி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

    இந்த நிலையில் படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது. அதில் முதல் கட்டமாக,  தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தரும், பைனான்சியருமான அன்புச் செழியன் கைப்பற்றியிருக்கிறார். ஏற்கனவே இவர் சிவகார்த்திகேயன் நடித்தவரும் பிரின்ஸ் என்ற திரைப்படத்தின் உரிமையையும் வாங்கியிருந்தார். இந்த நிலையில் மற்றொரு தெலுங்கு தயாரிப்பாளரிமிருந்து வாத்தி திரைப்படத்தை கைப்பற்றியுள்ளார்.

    Also read... முடிவுக்கு வந்தது வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு



    தனுஷ் நடித்து வரும் வார்தி திரைப்படத்தை டிசம்பர் மாதம் 2-ம் தேதி வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி