Home /News /entertainment /

வெளியானது தனுஷின் வாத்தி படம் குறித்த புதிய அப்டேட்!

வெளியானது தனுஷின் வாத்தி படம் குறித்த புதிய அப்டேட்!

வாத்தி

வாத்தி

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    மாறன் படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். ஏற்கனவே, இவர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்டப் படங்களில் தனுஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    Also read... Kalagathalaivan | ’கலகத் தலைவன்’ ஆக உதயநிதி ஸ்டாலின் - வெளியானது புதிய அப்டேட்!



    இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற ஜூலை 27ம் தேதியும், டீசர் வருகிற ஜூலை 28ம் தேதியும் வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush, Entertainment

    அடுத்த செய்தி