Home /News /entertainment /

தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

தனுஷ்

தனுஷ்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பிடித்த க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ரசிகர்கள் இப்படத்தின் இசை எவ்வாறு அமைந்துள்ளது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    Also read... ரஜினி, கமலுக்கு டெரர் காட்டிய ராமராஜன் படம்



    இந்நிலையில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தனஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் திருசிற்றம்பலம் படத்தில் இருந்து க்ளிம்ஸ் வீடியோவை பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி