Home /News /entertainment /

Dhanush : ஓடிடியில் நேரடியாக வெளியாகும் தனுஷின் 4வது திரைப்படம்?

Dhanush : ஓடிடியில் நேரடியாக வெளியாகும் தனுஷின் 4வது திரைப்படம்?

தனுஷ்

தனுஷ்

Dhanush : ஓடிடியில் வெளியாகும் மாறன் திரைப்படம்..

தனுஷ் நடிப்பில் கார்த்தின் நரேன் இயக்கியிருக்கும் மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

தனுஷின் ஜகமே தந்திரம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதன் பிறகு தனுஷ் நடித்திருக்கும் படங்கள் நான்கு. ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஐந்தில் மூன்று படங்கள் ஓடிடியில் வெளியாகும் என்பது திரையரங்குகள் கவலைப்பட வேண்டிய விஷயம்.

தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான தி க்ரே மேனின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள். சுமார் 1500 கோடிகள். இந்தப் படம் நெட்பிளிக்ஸுக்கென்றே தயாரிக்கப்பட்டது. விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.இதையடுத்து தனுஷ் நடித்த படம் மாறன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனை நேரடியாக ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். டிஸ்னி + ஹாட் ஸ்டார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது.

Also read : டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் இடம்பெற்ற இளையராஜா படம்..

அதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார். அதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. திருச்சிற்றம்பலத்தின் தயாரிப்பு சன் பிக்சர்ஸ் என்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகும்.

இதையடுத்து தாணு தயாரிப்பில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கம். அடுத்த வருடம் பிப்ரவரியில் இதன் மொத்த படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பு தனுஷ் இந்தியில் அத்ரங்கி ரே படத்தில் நடித்தார். ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கும் அந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என படத்தின் இன்னொரு ஹீரோவான அக்ஷய் குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actor dhanush, OTT Release

அடுத்த செய்தி