முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக கர்ணன் தேர்வு!

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக கர்ணன் தேர்வு!

கர்ணன்

கர்ணன்

சர்வதேச அங்கீகாரம் கர்ணனுக்கு கிடைத்து வந்த நிலையில், பெங்களூருவில் நடந்த பெங்களூரு இன்னோவேடிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியப் படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டது.

  • Last Updated :

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக மாரி செல்வராஜின் கர்ணன் படம் தேர்வு செய்யப்பட்டு, விருது அளிக்கப்பட்டது.

இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் கர்ணன் வெளியானது. கொடியன்குளம் சாதிக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம், கொரோனா இரண்டாம் அலை உச்சத்துக்குச் செல்ல, திரையரங்குகள் மூடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கர்ணன் ஓடிடியில் வெளியானது. ஏற்கனவே படம் இந்திய அளவில் பேசப்பட்ட நிலையில், ஓடிடி மூலமாக தமிழகம்தாண்டி படம் பல்லாயிரம் ரசிகர்களைச் சென்றடைந்தது. கொடியன்குளம் கலவரம் நடந்தது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில். படத்தில் வருடத்தை மாற்றி குறிப்பிட்டு, கலைஞர் ஆட்சியில் கலவரம் நடந்ததாக காட்டியதற்கு படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது முக்கியமானது.

2021 இல் உலக அளவில் வெளியான படங்களில் சிறந்த 25 படங்களை பட்டியலிட்டிருந்தனர். அதில் ஐந்து இந்தியப் படங்கள். அந்த ஐந்தில் மூன்று மலையாளப் படங்கள், இரண்டு தமிழ்ப் படங்கள். மண்டேலா மற்றும் கர்ணன். சமீபத்தில் நியூயார்க் டைம்ஸில், இந்த மாதத்தின் சிறந்த ஓடிடி படங்கள் பட்டியலில் கர்ணனும் இடம்பிடித்தது.

Also read... தனுஷின் நானே வருவேன் படத்தில் இணைந்த இந்துஜா...!

top videos

    சர்வதேச அங்கீகாரம் கர்ணனுக்கு கிடைத்து வந்த நிலையில், பெங்களூருவில் நடந்த பெங்களூரு இன்னோவேடிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியப் படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.

    First published:

    Tags: Actor dhanush, Karnan, Mari selvaraj