ஓடிடியில் வெளியாகிறதா தனுஷின் ஜகமே தந்திரம்?

ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓடிடியில் வெளியாகிறதா தனுஷின் ஜகமே தந்திரம்?
ஜகமே தந்திரம்
  • Share this:
பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே படப்பிடிப்பு முடிவடைந்து மே 1-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது.

படத்தின் ரிலீஸ் குறித்து கடந்த மே 1-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கார்த்திக் சுப்புராஜ், கொரோனா பிரச்னை முடிந்ததும் ஜகமே தந்திரம் திரைக்கு வரும் என்று கூறியிருந்தார். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் திரையரங்குகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.


ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டும் வருகின்றனர். ஆனால் தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இன்னும் ஓடிடி தளத்தில் ரிலீசாவது உறுதிப்படுத்தப்படவில்லை. பாலிவுட்டில் அக்‌ஷய்குமார், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களே ஓடிடி தளங்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட சில நிறுவனங்கள் தயாரிப்பாளரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், தனுஷுடன் கலந்து பேசிய பின்னர் தான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய சம்மதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading