ரசிகர்களின் 3 வருட எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படக்குழு!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

news18
Updated: July 11, 2019, 12:04 PM IST
ரசிகர்களின் 3 வருட எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படக்குழு!
எனை நோக்கி பாயும் தோட்டா
news18
Updated: July 11, 2019, 12:04 PM IST
ரசிகர்களின் 3 வருட எதிர்ப்பார்பிற்கு பிறகு இந்த மாதம் வெளியாகிறது தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்.

தமிழ் திரையுலகில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குநர்களில் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். அவர் எழுதி இயக்கி, தயாரித்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

2016-ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017-ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌதம் மேனனின் பணப்பிரச்சனைகளால் திடீரென ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தில் கவுதம் மேனனும், விஐபி 2, வட சென்னை படங்களில் தனுஷும் பிசியாகி விட்டதால் எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு தள்ளிப்போனது.

பின் பல மாதங்களுக்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வரும் என பேசப்பட்டது. அப்படத்தின் டீஸர் ரிலீஸாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

கடந்த வருடம் இப்படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் மீண்டும் நடைபெற தீபாவளிக்கு படம் வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் மீண்டும் பிரச்சனைகளில் சிக்கியதால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படம் வரும் 26ம் தேதி திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் தனுஷ் மற்றும் கவுதம் மேனன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரக் கனவு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கவுதம் மேனன் 2001-ம் ஆண்டு நடிகர் மாதவன் கதாநாயகனாக நடித்த மின்னலே என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப் படங்களை வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...