பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 44 வது படம்...!

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 44 வது படம்

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனுஷின் 44 வது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

கர்ணன் படத்தை முடித்த தனுஷ் ஹாலிவிட்டில் தயாரான தி க்ரே மேன் படத்தில் அடுத்ததாக நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இது தனுஷின் 43 வது படமாகும். மாறன் என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேகர் கம்முலா, செல்வராகவன், ராட்சசன் ரவிக்குமார் என பலருக்கு கால்ஷீட் கொடுத்திருந்த தனுஷ் இவர்களில் யாராவது ஒருவரின் படத்தின் நடிப்பார் என்றே அனைவரும் நினைத்தனர். மாறாக மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு தனுஷ் கால்ஷீட் தந்தார். இது அவரது 44 வது படமாகும். இதில் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ்.

Also read... படப்பிடிப்பின்போது கீழே விழுந்த சேரன்.. தலையில் காயம்

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதுவொரு குறுகியகால தயாரிப்பு என்றும் இரண்டே மாதங்களில் படப்பிடிப்பு முடிக்க இருப்பதாகவும் உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published: