Dhanush: மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

Dhanush: மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

தனுஷ் - பாலாஜி மோகன்

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் நல்ல விமர்சனங்களைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தனுஷ், அங்கு கர்ணன் படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

  • Share this:

    அவர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அனேகமாக படம் ஓடிடி-யில் வெளியாகலாம். இது தவிர இந்திப் படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பும் இந்த வருடம் தொடங்க உள்ளது.

    அதையடுத்து மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம். அத்துடன் முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், சாணிக்காகிதம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒன்று என படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

    ஆனால், இந்தப் படங்களையெல்லாம் முந்திக் கொண்டு ஒரு படம் வரவிருக்கிறது. மாரி, மாரி 2 படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு குறுகியகால தயாரிப்பில் தனுஷ் நடிக்க உள்ளார். நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை டிக் அடித்திருக்கிறார் தனுஷ். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: