Karnan Dhanush: அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ்!

Karnan Dhanush: அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ்!

நடிகர் தனுஷ்

’பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின், ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனை அமெரிக்காவில் தனுஷ் பார்த்திருகிறார்.

  • Share this:
    ’பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின், ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனை அமெரிக்காவில் தனுஷ் பார்த்திருகிறார்.

    கர்ணன் படத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கர்ணன் படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

    பல பிரபலங்களும், ரசிகர்களும் இப்படத்தைப் பார்த்து அதை பாராட்டி வரும் நிலையில், தற்போது கர்ணனை படத்தின் தனுஷ் அமெரிக்காவில் பார்த்துள்ளார். அவர் தற்போது தனது ஹாலிவுட் திரைப்படமான ’தி கிரே மேன்’ படப்பிடிப்பில் உள்ளார்.



    தனது நெட்ஃபிக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில், தனுஷ் அவரது குடும்பத்தினருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் கர்ணன் படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்துள்ளார். இதனை விநியோகஸ்தர் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்துள்ளது. கர்ணனை பார்த்த தனுஷ், அதன் அவுட்புட்டில் மகிழ்ச்சியடைந்துள்ளாராம். 50% சதவீத பார்வையாளர்களுடன் இயங்கும் அமெரிக்க திரையரங்குகளில், கர்ணன் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே இயக்குநர்கள் மாரி செல்வராஜ் மற்றும் ராம் ஆகியோருடன் வீடியோ காலில் பேசியுள்ளார் தனுஷ். இதனை மாரி செல்வராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: