Home /News /entertainment /

தனுஷ் இணைந்து நடிக்க ஆசைப்படும் இந்தி நடிகர்

தனுஷ் இணைந்து நடிக்க ஆசைப்படும் இந்தி நடிகர்

தனுஷ்

தனுஷ்

தனுஷ் நடிப்பில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே, மாறன் படங்கள் முடிந்துள்ளன. இதில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே இரண்டும் நேரடியாக ஓடிடியில் வெளியாகின்றன.

இந்தியில் எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு தனுஷ் பிரபல இளம் இந்தி நடிகரின் பெயரை கூறியுள்ளார்.

தனுஷ் இப்போது உலகளாவிய நடிகர். தனது ஹாலிவுட் படமான தி க்ரே மேனின் பேட்ச் வொர்க் ஷுட்டிங்கை முடித்த பின் மும்பையில் நடந்த அத்ரங்கி ரே படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்திருக்கும் படம் இது. டிசம்பர் 24 ஆம் தேதி படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

இந்த விளம்பர நிகழ்ச்சியில், எந்த இந்தி நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வி தனுஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் ரன்பீர் கபூர் என்றார் தனுஷ். அவர் ஒரு சிறந்த நடிகர். அவரும் நானும் ஒரே பிரேமில் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சு படம் வெளியான போது தனுஷ் ரன்பீர் கபூரின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருந்தார். Ranbir .. big hug man. Just a big big hug.  என தனது ட்வீட்டில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அப்படிப்பட்டவர் ரன்பீருடன் நடிக்க ஆசை என்று சொன்னது எதிர்பார்த்ததுதான்.

தனுஷ் நடிப்பில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே, மாறன் படங்கள் முடிந்துள்ளன. இதில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே இரண்டும் நேரடியாக ஓடிடியில் வெளியாகின்றன. மாறன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகும் என்கின்றன தகவல்கள்.

Also read... சென்னையில் நடந்த புஷ்பா படத்தின் பிரஸ்மீட் படங்கள்...!

இது தவிர சன் பிக்சர்ஸின் திருச்சிற்றம்பலம் படத்தையும் தனுஷ் முடித்துள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி