தனுஷின் வாத்தி திரைப்படத்தில் நடித்து வரும் சம்யுக்தா மேனன் மகேஷ் பாபுவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்களோ அவர்களே தென்னிந்திய அளவில் முதல் வரிசை நடிகைகளாக கருதப்படுவர். அந்தவகையில் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகள் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக வந்திருப்பவர்தான்
சம்யுக்தா மேனன். இவர் தற்போது தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாத்தி தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.
இதையும் படிங்க.. வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!
இதன் தெலுங்கு பதிப்புக்கு சார் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஒப்பந்தமான சம்யுக்தா மேனன் படத்தில் இருந்து வெளியேறியதாக முதலில் தகவல் வெளியானது.
இதையும் படிங்க.. பறவைகளுக்கு பரிந்து பேசிய நடிகைக்கு அபராத தொகையை குறைத்த உயர்நீதிமன்றம்
பிறகு அது
வதந்தி என படக்குழுவினர் விளக்கமளித்தனர். மகேஷ் பாபு அடுத்து நடிக்கும் புதிய படத்தில் சம்யுக்தா மேனன் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை த்ரி விக்ரம் இயக்குகிறார். சர்க்காரு வாரிபட்டா படத்துக்கு பிறகு மகேஷ் பாபு நடிக்கும் திரைப்படம் இது. பேமிலி என்டர்டெயினராக தயாராகும் இந்த படத்தில் சம்யுக்தா மேனனை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஹைதராபாத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.