Home /News /entertainment /

Vaathi: தனுஷின் வாத்தி படத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Vaathi: தனுஷின் வாத்தி படத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

வாத்தி

வாத்தி

தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் டிசம்பர் இரண்டாவது வாரம் வெளியாகிறது. தமிழகத்தில் அன்புச் செழியன் வெளியிடுகிறார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தை தமிழகத்தில் அன்புச்செழியன் வெளியிடுகிறார்.

நடிகர் தனுஷ், வெங்கி அட்லூரி என்பவர் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு ஐத்தராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. வாத்தி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக,  தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தரும், பைனான்சியருமான அன்புச் செழியன் கைப்பற்றியிருக்கிறார். ஏற்கனவே இவர் சிவகார்த்திகேயன் நடித்தவரும் பிரின்ஸ் என்ற திரைப்படத்தின் உரிமையையும் வாங்கியிருந்தார். இந்த நிலையில் மற்றொரு தெலுங்கு தயாரிப்பாளரிமிருந்து வாத்தி திரைப்படத்தை கைப்பற்றியுள்ளார்.

பிசாசு 2 செகண்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனுஷ் நடித்து வரும் வார்தி திரைப்படத்தை டிசம்பர் மாதம் 9-ம் தேதி வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush, Tamil Cinema

அடுத்த செய்தி