தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய நான்கு படங்கள் வெளியாகியிருந்தது. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மட்டும் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.
இதனையடுத்து தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. தெலுங்கில் சார் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.
Let the celebration begin! 🎉
நம்ம #வாத்தி வரார் 🔥#Vaathi Grand Audio Launch on 4th Feb 🥳#VaathiVaraar 🕺#VaathiAudioLaunch
A @gvprakash musical 🎵#Vaathi @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @vamsi84 @anthonydaasan #Yugabharathi pic.twitter.com/nx6P5wA6cX
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 1, 2023
ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்தப் படத்திலிருந்து வா வாத்தி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 4 ஆம் தேதி சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Dhanush