Home /News /entertainment /

தனுஷின் நேரடித் தெலுங்குப் படம் குறித்த புதிய தகவல்கள்

தனுஷின் நேரடித் தெலுங்குப் படம் குறித்த புதிய தகவல்கள்

dhanush upcoming movie

dhanush upcoming movie

செல்வராகவனின் நானே வருவேன் படத்தையும் தனுஷ் முடிக்க உள்ளார். இவற்றைத் தொடர்ந்து சேகர் கம்முலா, அருண் மாதேஸ்வரன் படங்களில் நடிக்க உள்ளார்.

தனுஷ் படங்களின் பட்டியல் திடீர் திடீரென மாறிக் கொண்டிருக்கிறது. அத்ரங்கி ரே, தி க்ரே மேன், மாறன், சேகர் கம்முலா படம், நானே வருவேன், ராட்சசன் ராம்குமார் படம் என 2021 ஆரம்பத்தில் இருந்த பட்டியலில் அனைத்தையும் முந்திக் கொண்டு திருச்சிற்றம்பலம் படம் நுழைந்தது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை தனுஷ் முடித்துவிட்டார்.தற்போது நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்குப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தனது அடுத்தப் படம் தனுஷுடையது என்றார் சேகர் கம்முலா. ஆனால், திடீரென அதிலும் மாற்றம். வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்றனர். இது நேரடித் தெலுங்குப் படம். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் எடுக்கின்றனர்.

இதையும் படிங்க.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது யார்? வெளியான தகவல்!

பட்டியல் மாற்றம் அத்துடன் முடியவில்லை. ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க அடுத்த வருட மத்தியில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் தனுஷ். சரி, இதில் எது முதலில் தொடங்கப்படும்? வெங்கி அட்லூரியின் படம். 2022 ஜனவரி 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஒரே ஷெட்யூல்டில் எந்த இடைவெளியும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி ஜனவரி இறுதிக்குள் முழுப்படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க.. வித்தியாசமான அசுரன் நீ.. நடிகர் மாதவன் யாரை இப்படி பாராட்டினார் தெரியுமா?

அத்துடன் செல்வராகவனின் நானே வருவேன் படத்தையும் தனுஷ் முடிக்க உள்ளார். இவற்றைத் தொடர்ந்து சேகர் கம்முலா, அருண் மாதேஸ்வரன் படங்களில் நடிக்க உள்ளார்.இப்போதைக்கு இதுதான் தனுஷின் படப்பட்டியல். நடிப்பது தனுஷ் என்பதால் இதிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actor dhanush, Kollywood

அடுத்த செய்தி