தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க தலைவா...! தனுஷ் உற்சாகம்

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில், நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது” என்ற அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

news18
Updated: January 10, 2019, 1:08 PM IST
தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க தலைவா...! தனுஷ் உற்சாகம்
நடிகர் தனுஷ்
news18
Updated: January 10, 2019, 1:08 PM IST
“தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க தலைவா” என்று பேட்ட படத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ்.

கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஹாஸ்டல் வார்டனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும். புதுசா வருபவர்களை தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது. ” என்ற அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த நடிகர் தனுஷ், "பேட்ட ஒரு இதிகாசம். சூப்பர்ஸ்டார். லவ் யூ தலைவா.தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். கார்த்திக் சுப்புராஜுக்கு மிகப்பெரிய நன்றி.

நாங்கள் நிச்சயம் #rajinified ஆனோம். அனிருத்தின் பின்னணி இசை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பு. பேட்ட பராக்..." என்று பதிவிட்டுள்ளார்.

பேட்டையா? விஸ்வாசமா?... ரசிகர்களின் சாய்ஸ் என்ன - வீடியோ

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...