ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாஸ்தான்.. எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்.. உறுதியானது அடுத்தப்படம்.. விவரம்!

மாஸ்தான்.. எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்.. உறுதியானது அடுத்தப்படம்.. விவரம்!

எச்.வினோத்-தனுஷ்

எச்.வினோத்-தனுஷ்

Dhanush | எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் லலித் குமார் தயாரிக்கும் திரைப்படம் உறுதியானது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எச்.வினோத் அதன்பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது அவருடைய இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்தை எச்.வினோத் இயக்குவார். அதற்கான வேலைகள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் எச்.வினோத் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

தற்போது அது இறுதி கட்டத்தை எட்டி எச்.வினோத் முன்தொகை பெற்றுள்ளார். மேலும் அடுத்த வாரம் தனுஷிற்கு லலித்குமார் முன் தொகை கொடுக்கிறார் எனக் கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஶ்ரீதேவியின் நினைவுகள்.. வீடு முழுவதும் பெயிண்டிங்.. ஜான்வி கபூரின் சென்னை வீடு!

இந்த படங்களை முடித்துவிட்டு சேகர் கம்முலா இயக்கும் Pan India திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார்.  அதை முடித்துவிட்டு எச்.வினோத் படத்தில் தனுஷ் இணைவார் என கூறப்படுகிறது.

First published:

Tags: Actor dhanush, Kollywood, Tamil Cinema