Home /News /entertainment /

Dhanush: தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் லைஃப் ஆஃப் பழம் பாடல் வெளியீடு!

Dhanush: தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் லைஃப் ஆஃப் பழம் பாடல் வெளியீடு!

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

நாளை தனுஷ் தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் இணையத்தில் அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

    தனுஷ் நடித்துள்ள திருச்சிறம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிளான லைஃப் ஆப் பழம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

    நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் சிங்கிளான தாய் கிழவி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை யூ-ட்யூபில் இந்தப் பாடலுக்கு 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஹைதராபாத்துக்கு குட் பை சொன்ன விஜய்யின் வாரிசு டீம்!



    இதையடுத்து படத்தின் இரண்டாவது சிங்கிளான மேகம் கருக்காதா என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிளான லைப் ஆஃப் பழம் வெளியாகியுள்ளது. நாளை தனுஷ் தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் இணையத்தில் அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

    தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, வாத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நானே வருவேன் புதிய போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிளும் வெளியாகியிருப்பது தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி