Home /News /entertainment /

தனுஷின் திருச்சிற்றம்பலம் செகண்ட் சிங்கிள் வெளியீடு அறிவிப்பு!

தனுஷின் திருச்சிற்றம்பலம் செகண்ட் சிங்கிள் வெளியீடு அறிவிப்பு!

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

இப்படத்திலிருந்து தாய் கிழவி எனும் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹரின் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

    திருச்சிற்றம்பலம் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து தாய் கிழவி எனும் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் மற்ற பாடல்களையும் கேட்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தார்கள் ரசிகர்கள்.

    பார்த்திபன்... வித்தியாச முயற்சிகளை செய்ய துடிக்குற கலை ரசிகன் - ரஜினிகாந்த் பாராட்டு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடல் வரும் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Dhanush, Nithya menon

    அடுத்த செய்தி