Home /News /entertainment /

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ஹீரோயின் கேரக்டரை வெளியிட்ட படக்குழு…

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ஹீரோயின் கேரக்டரை வெளியிட்ட படக்குழு…

நடிகை ராஷி கன்னா

நடிகை ராஷி கன்னா

Dhanush : மாரி படத்திற்கு பின்னர் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்திருப்பதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ஹீரோயின் கேரக்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இன்று முதல் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் தினசரி வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதன்முறையாக தனுஷுடன் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ராஷி கன்னா ஜோடி சேர்ந்துள்ளார்.

இவர் தமிழில் வெளிவந்த இமைக்கா நொடிகள், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. குறிப்பாக துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான மாறன் திரைப்படம் மீது தனுஷ் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

Also read... மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம்! 

ஓடிடியில் வெளியான மாறன் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்ணனுக்கு பின்னர் திரையரங்குகளில் வெளியாகப் போகும் திருச்சிற்றம்பலம் படம் மீது தனுஷ் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை தனுஷின் குட்டி, யாரடி நீ மோகினி படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க - இந்த ஹிட் பாடல்களை எழுதியது விக்னேஷ் சிவனா? இளம் இயக்குனரின் இன்னொரு பக்கம்

மாரி படத்திற்கு பின்னர் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்திருப்பதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்நிலையில் ஹீரோயின் ராஷி கன்னாவின் கேரக்டர் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இவரது பெயர் படத்தில் அனுஷா என்றும், இவர் ஹீரோ தனுஷின் ஹை ஸ்கூல் கிளாஸ்மேட்டாக வருவார் என்று அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Dhanush

அடுத்த செய்தி