Home /News /entertainment /

தனுஷின் பிறந்த நாளன்று வெளியாகும் ‘திருச்சிற்றம்பலம்’… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷின் பிறந்த நாளன்று வெளியாகும் ‘திருச்சிற்றம்பலம்’… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ்

தனுஷ்

தனுஷுக்கு கடந்த சில படங்கள் சரியாக அமையாத நிலையில், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் படங்கள் அவருக்கு கம் பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவரது பிறந்த நாளையொட்டி வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ரசிகர்கள் இப்படத்தின் இசை எவ்வாறு அமைந்துள்ளது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றும் அவனது இளமைப் பருவம் என இப்படத்தின் கதையானது இரண்டு காலகட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷின் கதாபாத்திரத்தில் இரண்டு காதல்கள் உள்ளன, ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும் வருகின்ற மாதிரி கதையை வடிவைத்திருக்கிறார் இயக்குனர். நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இப்படத்தில் இணைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் .

இதையும் படிங்க - கார்த்தியின் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… போலீஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம்தேதியன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதற்கு முன்பாக தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு கடந்த சில படங்கள் சரியாக அமையாத நிலையில், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் படங்கள் அவருக்கு கம் பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Published by:Musthak
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி