ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பாடல் மேக்கிங் வீடியோ!

திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பாடல் மேக்கிங் வீடியோ!

மேகம் கருக்காதா பாடல்

மேகம் கருக்காதா பாடல்

இந்த பாடலுக்கும் அதன் நடன அசைவுகளுக்கும் அமோக வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜானி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள ’மேகம் கருக்காத’ பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார் டான்ஸ் மாஸ்டர் ஜானி. 

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியதோடு, பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் குவித்தது. அதோடு 'திருச்சிற்றம்பலம்' பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மேகம் கருக்காதா' பாடல் வீடியோ தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, 'திருச்சிற்றம்பலம்' படத்தில் அந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது எடுத்த மேக்கிங் வீடியோவை ஜானி மாஸ்டர் பகிர்ந்துள்ளார். பிரபுதேவாவின் ஆல் டைம் ஹிட் பாடலான 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடலைப் போன்ற ஸ்டெப்கள் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தது.

இந்த பாடலுக்கும் அதன் நடன அசைவுகளுக்கும் அமோக வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜானி. தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவருக்கும் ஜானி மாஸ்டர் நடனம் சொல்லிக் கொடுத்த காட்சி அந்த மேக்கிங் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மகளுக்கு மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், வெளியான 'திருச்சிற்றம்பலம்' நீண்ட நாள் நண்பர்கள் இருவர் வாழ்க்கைத் துணைவர்களாக மாறுவதை மையப்படுத்தி இயக்கப்பட்டிருந்தது. காதல், நகைச்சுவை மற்றும் செண்டிமென்ட் கலந்த பொழுதுபோக்கு பாணியில் படம் உருவானது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 'திருச்சிற்றம்பலம்' உலகம் முழுவதும் ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, மேலும் இப்படம் தமிழகத்தில் ரூ.30 கோடிக்கு மேல் ஷேர் பெற்று தனுஷின் சிறந்த படமாக மாறியுள்ளது.

First published:

Tags: Dhanush, Nithya menon