தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படமும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படமும் ஒரே நாளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான தனுஷின் மாறன் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு அளித்தது.
இந்த நிலையில் கர்ணனுக்கு பின்னர் தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - ‘சினிமாடிக்கெட் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ - தயாரிப்பாளர்கள் கோரிக்கை
ஜூலை முதல் வாரத்தில் இந்தப் படம் வெளியாகும் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒத்தி வைத்திருக்கிறது.
மித்ரன் ஜவகர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிரியா பவானி சங்கர்,ராஷி கன்னா, நித்யா மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க - அழகில் ஹீரோயின்களை மிஞ்சும் பாடகி ஜொனிதா காந்தி
இதேபோன்று சிம்புவின் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஆகஸ்டில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்தன.
தற்போது இந்த படத்தை ஆகஸ்ட் 18-ம்தேதி திரைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே நாளில் தனுஷ், சிம்பு படங்கள் மோதுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்னும் அறிவிக்காமல் உள்ளனர். இந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.