உங்களால் கர்வம் கொள்கிறேன் - நடிகர் தனுஷ் அறிக்கை

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உங்களால் கர்வம் கொள்கிறேன் - நடிகர் தனுஷ் அறிக்கை
நடிகர் தனுஷ்
  • Share this:
ஜூலை 28-ம் தேதி நடிகர் தனுஷ் தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த நாளில் அவர் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் பாடலும், கரணன் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் டைட்டில் லுக்கும் வெளியிடப்பட்டன.

#HappyBirthdayDhanush, #HBDDhanush ஆகிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கிய ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

படிக்க: தமிழகத்தில் ஆகஸ்ட் வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் என்னென்ன..?


படிக்க: 7 மணிநேரமாக இளைஞர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் தங்கியிருந்த பாம்பு.. (வீடியோ)படிக்க: மதுரை: மதுப்பிரியர்களை வரவழைக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய யுக்தியை கடைபிடிக்கும் டாஸ்மாக்..
இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்கு முக்காடிப் போய்விட்டேன், அனைத்து காமன் டிபிக்கள், மேஷ் அப் வீடியோக்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த கவுண்ட்டவுன் டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன். ரசித்தேன். மகிழ்ந்தேன்.மிக்க மிக்க நன்றி அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன். பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading