ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷின் ‘வாத்தி’ படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பு… காரணம் இதுதானாம்…

தனுஷின் ‘வாத்தி’ படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பு… காரணம் இதுதானாம்…

வாத்தி படத்தில் தனுஷ்

வாத்தி படத்தில் தனுஷ்

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

    திருச்சிற்றம்பலம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது.

    இதனால் அடுத்து வெளிவர உள்ள வாத்தி திரைப்படம் சூப்பர் ஹிட்டாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தனுஷூம், அவரது ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில் வாத்தி படத்தின் வெளியீடு டிசம்பர் மாதத்திலிருந்து தள்ளி போக கூடும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

    தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு…

    இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்று, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கிராபிக்ஸ் பணிகள் கூடுதலாக இருப்பதால் போஸ்ட் புரொடக்ஷன் எதிர்பார்த்ததைவிட கூடுதல் நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதனால் டிசம்பர் 2-ஆம தேதி திட்டமிடப்பட்டிருந்த வாத்தி படத்தின் வெளியீடு, அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளிப் போகவும் கூடும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தேடித் தேடி செல்லும் கூட்டம்.. தீபாவளி படங்களுடன் போட்டி போடும் பொன்னியின் செல்வன்.!

    நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். இதேபோன்று வாத்தி படத்தையும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த வெங்கி அட்லூரி இயக்கியுள்ளதால், இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush