Home /News /entertainment /

தனுஷ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

தனுஷ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

நானே வருவேன்

நானே வருவேன்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் செல்வராகவும் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். இந்தப் படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் செல்வராகவும் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். இந்தப் படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதில் படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நானே வருவேன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இந்த திரைப்படத்தை சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு அடுத்த நாள்  பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதால் முதல் நாளில் அதிக வசூல் ஈட்ட வேண்டும் எனவும் அவர் கணக்கிட்டுள்ளார்.

Also read... பிரின்ஸ் படத்திலிருந்து 2-வது சிங்கிள் நாளை ரிலீஸ்!

அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இந்த திரைப்படத்தில் அண்ணன் - தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி