தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தனுஷின் ரசிகர்கள் ட்ரெய்லரால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கர்ணன் படத்திற்கு பின்னர் வெளிவந்த தனுஷின் மாறன், ஜெகமே தந்திரம், அந்த்ராங்கி ரே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தனுஷின் ரசிகர்கள் உள்ளார்கள்.
நேற்று வெளியான தனுஷின் கேரக்டர் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. அதில் தனுஷுக்கு Lethal Force என்ற அடைமொழி கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தனுஷுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தி கிரே மேன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரின் 1:22 வது நிமிடத்தில் தனுஷின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Brace yourself for jaw-dropping action in a new global spy thriller directed by The @Russo_Brothers.
Ryan Gosling, @ChrisEvans, Ana de Armas, Jessica Henwick, @regejean, Wagner Moura, @Julia_Butters, @dhanushkraja, Alfre Woodard & Billy Bob Thorton star in The Gray Man. July 22 pic.twitter.com/ylMVhoKmGj
— Netflix (@netflix) May 24, 2022
The gray man trailer @Russo_Brothers pic.twitter.com/QW9hBs3uRC
— Dhanush (@dhanushkraja) May 24, 2022
At
1:22 secs
Our man
The lethal force …..@dhanushkraja
Pride of India …..
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
Time for celebrations 🕺🏻🕺🏻🕺🏻https://t.co/28C5q3mh64#TheGrayMan pic.twitter.com/bLXteEtyzq
— Dr Karthick Anjaneyan (@dranjee) May 24, 2022
தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஜூலை 22-ம்தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்பாக அமெரிக்காவின் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் தி கிரே மேன் திரைப்படம் ஜூலை 15-ம்தேதி வெளியிடப்பட உள்ளது.
தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கதையும் எழுதியிருக்கிறார் தனுஷ்.
நானே வருவேன் படத்திற்கு முன்பாக மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor dhanush