Home /News /entertainment /

யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?

யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?

ஆர்னா அஸ்வின் - தனுஷ்

ஆர்னா அஸ்வின் - தனுஷ்

திரையுலக பிரபலங்கள் இருவரின் குழந்தைகள் பள்ளி விளையாட்டுப் பிரிவுக்கு கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற நிலையில், ஜூனியர் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக இன்னொரு நடிகரின் மகள் பொறுப்பேற்றிருக்கிறார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடுகளால் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தனுஷ் தனது நடிப்பிலும், ஐஸ்வர்யா தனது இயக்கப் பணியிலும் பிஸியானார்கள்.

    பிரிவை அறிவித்து மாதங்கள் கடந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தங்கள் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் கலந்துக் கொண்டனர். பிரிவுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகின.

    அந்த விழாவில், யாத்ரா தனுஷ் பள்ளி விளையாட்டு கேப்டனாகவும், ஆர்னா அஸ்வின் சேகர் ஜூனியர் விளையாட்டு கேப்டனாகவும் பதவியேற்றனர். ஆர்னா நடிகர் அஸ்வின் சேகரின் மகளும், மூத்த நகைச்சுவை நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகரின் பேத்தியும் ஆவார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வெற்றிமாறனின் விடுதலை படத்தில் பிரபல இயக்குநர்?



    அந்தப் படத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார் எஸ்.வி.சேகர். திரையுலக பிரபலங்கள் இருவரின் குழந்தைகள் பள்ளி விளையாட்டுப் பிரிவுக்கு கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Rajinikanth

    அடுத்த செய்தி