ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷ் – சிம்பு இணைந்து நடிக்கும் படம்?! புதிய தகவலால் பரபரப்பான கோலிவுட்!

தனுஷ் – சிம்பு இணைந்து நடிக்கும் படம்?! புதிய தகவலால் பரபரப்பான கோலிவுட்!

சிம்பு - தனுஷ்

சிம்பு - தனுஷ்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த படத்தை, தனுஷ் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி, கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். இருவரும் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து உள்ளனர். இருவருக்குமே இயக்கம், பாடல், இசை என மல்டி டேலண்ட் அதிகம் உள்ளன.

    வெள்ளித்திரையில் இருவருமே ஒருவருக்கொருவர் போட்டியாளர்கள் என்று கூறப்பட்டாலும், திரைக்குப்பின்னால் இருவரும் நல்ல நட்பு பாராட்டி வருகின்றனர். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நானே வருவேன்’ மற்றும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்துள்ளன.

    ஸ்ட்ராபெர்ரி பெண்ணே! கண்ணை பறிக்கும் அழகில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்..

    இந்த நிலையில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் அடுத்ததாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த படத்தை, தனுஷ் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

    இதேபோன்று திரைக்கதை, வசனம் உள்ளிட்டவைகளை தனுஷ் - சிம்பு இருவரும் இணைந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருவருக்குமே மிக பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருப்பதால், ஒருவேளை இருவரும் இணைந்து படம் நடித்தால் இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய படங்களில் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொன்னியின் செல்வன் ‘வானதி’ வெளியிட்ட ஹாட் க்ளிக்ஸ்!

    இந்த படத்திற்கு இருவருக்குமே ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது அவர் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். சிம்பு தற்போது ‘பத்து தல’ படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush, Simbu