மகன்களுடன் தனுஷ் எடுத்துக் கொண்ட போட்டோ - பிரபல நடிகையின் கமெண்ட்

மகன்களுடன் தனுஷ்

தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

 • Share this:
  நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கொரோனா காலகட்டத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

  கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிமாறன், கார்த்திக் நரேன் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

  சினிமாவில் எப்போதுமே பிஸியாக வலம் வரும் தனுஷூக்கு கொரோனா காலகட்டம் சிறு ஓய்வைக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மூத்த மகன் யாத்ராவுடன் தனுஷ் இருப்பதைப் பார்த்து இன்னும் இளமையாகவே இருப்பதாக பலரும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். ரசிகர்களின் லைக்ஸ் மட்டுமல்லாது திரைபிரபலங்கள் பலரின் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது தனுஷின் இந்த பதிவு.   
  View this post on Instagram
   

  When your first born wears your tshirt and argues it’s his ❤ #Yathra #Linga


  A post shared by Dhanush (@dhanushkraja) on


  புகைப்படத்துடன் தனுஷ் எழுதியிருக்கும் இந்த பதிவில், மூத்த மகன் உங்கள் டிசர்ட்டை அணிந்துகொண்டு, தன்னுடையது என்று விவாதிக்கும் தருணம்” என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். மாரி பட வில்லன் டொவினோ தாமஸ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் தனுஷின் இந்தப் பதிவுக்கு அன்பை உணர்த்தும் ஹார்ட்டின் இமோஜி போட்டு ரிப்ளை செய்திருக்கின்றனர். நடிகை அதிதி ராவ், மகன்கள் உங்களை இனிமையாக துன்புறுத்துகிறார்கள் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: