Home /News /entertainment /

Naane Varuven: நாளை மறுதினம் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Naane Varuven: நாளை மறுதினம் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

நானே வருவேன்

நானே வருவேன்

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷ் - யுவன் சங்கர் ராஜா - செல்வ ராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் நானே வருவேன் படத்தின் முதல் பாடல் புதன்கிழமை மாலை 4:40 மணிக்கு வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மறுதினம் வெளியாகிறது. 

புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை வரும் 30ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளார்.

அதில் முதல் கட்டமாக படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் முதல் பாடலை 7-ம் தேதி மாலை 4:40 மணியளவில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து படத்தின் டிரைலரை SIIMA விருது வழங்கும் விழாவில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்க தெரியும்... ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார்

படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தயாரிப்பாளர் தாணு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக தனுஷ் திரை பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரையும் திருச்சிற்றம்பலம் பெற்றுள்ளது.



அந்த வெற்றியைத் தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதை சரியாக பயன்படுத்திக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush, Tamil Cinema

அடுத்த செய்தி