அண்ணன் செல்வராகவனுக்கு இந்த வருடமே கால்ஷீட் தரும் தனுஷ்!

தனுஷ்

நானே வருவேன் படத்தின் பெயரை மாற்றுவதாக எழுந்த வதந்தியையும் செல்வராகவன் மறுத்துள்ளார். இதன் மூலம் நானே வருவேன் கைவிடப்படவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என அறிவிப்பு வந்து மாதங்களாகிறது. படம் எப்போது தொடங்கும்? இல்லை அறிவிப்போடு கைவிடப்பட்டதா என்று ரசிகர்கள் குழப்பமடைந்திருக்கும் நிலையில், இந்த வருடமே தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் என உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.

செல்வராகவனின் கடைசிப் படங்கள் சரியாகப் போகாமல் கிட்டத்தட்ட பீல்ட் அவுட்டான நிலையில் இருக்கிறார். இதனிடையில் சாணிக்காயிதம் படத்தில் நடித்தவர், தொடர்ந்து பீஸ்ட் படத்தில் ஒப்பந்தமானார். இயக்கம் ஒத்து வராம்ல் செல்வராகவன் நடிகராகிவிட்டார் என பலரும் நினைத்தனர்.

 

அதற்கேற்ப, ஆகஸ்ட் 20 தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நானே வருவேன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை. அதற்குப் பதில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவனின் முன்னாள் உதவி இயக்குனர் மித்ரன் கே.ஜவஹரின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு கால்ஷீட் தந்தார் தனுஷ்.

இதையடுத்து சேகர் கம்முலாவின் பான் - இந்தியா திரைப்படம் இருக்கிறது. ஆக, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது கேள்விக்குறி என பலரும் பேசினர்.ஆனால், திருச்சிற்றம்பலத்தைத் தொடர்ந்து செல்வராகவன் படத்துக்கு தனுஷ் கால்ஷீட் தர இருப்பதாகவும், நவம்பரில் இவர்கள் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தனுஷுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.நானே வருவேன் படத்தின் பெயரை மாற்றுவதாக எழுந்த வதந்தியையும் செல்வராகவன் மறுத்துள்ளார். இதன் மூலம் நானே வருவேன் கைவிடப்படவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.

Also read... 17 வயதில் எடுத்த ஹாட் புகைப்படம் - நமீதா சொன்ன ரகசியம்!

நானே வருவேன் படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  
Published by:Vinothini Aandisamy
First published: