Home /News /entertainment /

தனுஷின் நானே வருவேன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தள்ளிவைப்பு…

தனுஷின் நானே வருவேன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தள்ளிவைப்பு…

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் நானே வருவேன் படத்தை வரும் 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்தின் டிரெய்லர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் டிரெய்லர் SIIMA விருது வழங்கும் விழாவில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து 11ஆம் தேதி வெளியிட ட்ரைலரும் தயார் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் நானே வருவேன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எப்படி இருக்கிறது பாரதிராஜாவின் உடல்நிலை? முதல்வருடன் சென்று சந்தித்த பின்னர் வைரமுத்து விளக்கம்

அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் வரும் 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு நாள் முன்கூட்டியே நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட முடிவெடுத்து இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இருந்தாலும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.



இந்த படத்தில் இடம்பெற்ற வீரா சூரா பாடல் சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
Published by:Musthak
First published:

Tags: Actor dhanush, Director selvaragavan

அடுத்த செய்தி