Home /News /entertainment /

தனுஷின் 'நானே வருவேன்' பட ட்ரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…

தனுஷின் 'நானே வருவேன்' பட ட்ரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

நானே வருவேன் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

மயக்கம் என்ன படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வரும் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படத்துடன் நானே வருவேன் படத்தை களமிறக்க தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டு இருக்கிறார்.

அதில் முதல் கட்டமாக செப்டம்பர் 11ம் தேதி ஒரு விருது வழங்கும் விழாவில் படத்தின் டிரைலரை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறன.

பாகுபலி நடிகையிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை… நடந்தது என்ன?

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என கூறுகின்றனர்.

நானே வருவேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அவர் தற்போது படத்திற்கு பின்னணி இசை கோர்ப்பு வேலைகளில் ஈடுபாட்டுள்ளார். அது முடிவடைந்ததும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளனர்.

ஜாதி ரீதியிலான படங்கள் என்பவை இயக்குனர்களின் படைப்பு சுதந்திரம் சார்ந்தது – நடிகர் ஆர்யா விளக்கம்

படத்தின் வெளியீட்டுதேதி செப்டம்பர்30 என உறுதி செய்யப்பட்டு விட்டால் நானே வருவேன் திரைப்படம், மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வனோடு மோதும்.
Published by:Musthak
First published:

Tags: Actor dhanush, Selva ragavan

அடுத்த செய்தி