சமந்தா மற்றும் தனுஷ் இருவரை தொடர்ந்து பிரபல நடிகை ஒருவரும் விவாகரத்துக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைத்துறையில் விவாகரத்துகள் என்பது பேசுபொருளாக மாறும். திருமண வாழ்க்கையில் பிரிவு என்பது சாதாரணமான ஒன்று என்றாலும், திரைத்துறையில் அது நடக்கும் போது, அதிக வெளிச்சம் பாய்ச்சப்படும். சமீபத்தில் தமிழ் சினிமாவிலும் அப்படியான நிகழ்வுகள் நடந்தன.
கடந்த அக்டோபரில் தனது காதல் கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார் நடிகை சமந்தா. படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.
இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து நடிகர்
தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் பிரிவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சமந்தாவும், தனுஷும் தங்கள் துணையை விட்டு பிரிந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சன் டிவி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி மீது மோசடி புகார்
இந்நிலையில் வேறொரு நடிகையும் தனது கணவரை விட்டு பிரிய தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் வேறு யாருமல்ல நடிகை ஷில்பா ஷெட்டி தான். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ஷில்பா தற்போது கணவர் ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளாராம். ராஜ்குந்த்ரா பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றிய ஷில்பா ஷெட்டி, கணவ்ர் பெயரில் இருந்த பண்ணை வீட்டையும் தனது பெயருக்கு மாற்றியுள்ளாராம். இதை வைத்துப் பார்க்கும் போது இவர்கள் விரைவில் விவாகரத்தை அறிவிப்பார்கள் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.