Home /News /entertainment /

என் அன்பான ஜானி மாஸ்டரின் மேஜிக்... மேகம் கருக்காதா பாடல் குறித்து தனுஷ் ட்வீட்!

என் அன்பான ஜானி மாஸ்டரின் மேஜிக்... மேகம் கருக்காதா பாடல் குறித்து தனுஷ் ட்வீட்!

மேகம் கருக்காதா பாடல்

மேகம் கருக்காதா பாடல்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
    திருசிற்றம்பலம் படத்திலிருந்து வெளியான மேகம் கருக்காதா பாடல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதற்கு என் அன்பான ஜானி மாஸ்டரின் மேஜிக் தான் காரணம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

    நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹரின் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

    திருச்சிற்றம்பலம் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து தாய் கிழவி மற்றும் மேகம் கருக்காதா பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    Also read... படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே வெளியாகும் ஜெயிலர் பட கிளிம்ப்ஸ் வீடியோ?

    இந்நிலையில் தனுஷ் எழுதி பாடிய மேகம் கருக்காத பாடல் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு நடிகர் தனுஷ் ஆடிய நடனத்தினை பலரும் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோவை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.



    அதனை ரீ ட்வீட் செய்த தனஷ் மேகம் கருக்காதா பாடலின் வெற்றிக்கு என் அன்பான ஜானியின் மேஜிக் என்று பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush, Entertainment

    அடுத்த செய்தி