விறுவிறுப்பான படப்பிடிப்பில் கர்ணன்... தனுஷ் வெளியிட்ட போட்டோ!

கர்ணன் படத்தில் தனுஷ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    மாரி செல்வராஜ் இயக்கத்தில்  தனிஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    தனுஷின் 41-வது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.



    படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தனுஷ் லுங்கி கட்டிக் கொண்டு கையில் வாளுடன் மலை உச்சியில் நிற்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



    தனுஷின் ட்வீட்டை  ரீசேர் செய்த இயக்குனர் மாரி செல்வராஜ், அவனே அன்பின் கொடை என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சம்பவம் தரமானதா இருக்கும் என்று கமெண்ட்களை தெரிக்கவிடுகின்றனர்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published: