Home /News /entertainment /

தனுஷ் நடிக்கும் பீரியட் திரைப்படம்!

தனுஷ் நடிக்கும் பீரியட் திரைப்படம்!

தனுஷ்

தனுஷ்

அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் சாணிக்காயிதம் 2022 ஜனவரியில் வெளியாகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 1950-களில் நடக்கும் கதையை கொண்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இது அவரது 47-வது படமாக தயாராகிறது. 2022 மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை தயாரித்திருக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இது 1950-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதை. தனுஷுக்கு இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடம். படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இவர் தனுஷ் நடித்த கொடி, வடசென்னை, கர்ணன், ஜகமே தந்திரம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் படம் இவர்கள் இணையும் ஐந்தாவது படமாக இருக்கும்.

அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் சாணிக்காயிதம் 2022 ஜனவரியில் வெளியாகிறது. ராக்கியைவிட அதிக வன்முறை நிறைந்த படம். வன்புணர்வு காட்சியும் உண்டு. அதனால் திரையரங்குக்குப் பதில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவே வாய்ப்பு. தனுஷை வைத்து அவர் இயக்கும் படமும் வன்முறை நிரம்பியதாக இருக்கும்.

தனுஷ் தற்போது செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் நடிக்கிறார். அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். அதையடுத்து அருண் மாதேஸ்வரன் படம் தொடங்கப்படும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி