தனுஷின் ’பட்டாஸ்’ ஃபர்ஸ்ட் லுக்... பிகிலுடன் மோதுகிறதா?

‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

news18
Updated: July 28, 2019, 7:13 PM IST
தனுஷின் ’பட்டாஸ்’ ஃபர்ஸ்ட் லுக்... பிகிலுடன் மோதுகிறதா?
பட்டாஸ் பட ஃபர்ஸ்ட் லுக்
news18
Updated: July 28, 2019, 7:13 PM IST
தனுஷ் நடிக்கும் அவரது 39-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.  ‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.


இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் நடிகர் தனுஷின் பெயர் இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தோன்றும் என்றும் கூறப்படுகிறது.

பிகில் | பட்டாஸ்


இதுஒருபுறமிருக்க ’பட்டாஸ்’  படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய், தனுஷின் படங்கள் நேரடியாக மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Loading...

வீடியோ பார்க்க: தங்க மகன் தனுஷ் சக்ஸஸ் ஸ்டோரி..

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...