Home /News /entertainment /

வியக்க வைக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல்… வேலைநாளிலும் தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்…

வியக்க வைக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல்… வேலைநாளிலும் தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்…

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. நேற்று வேலைநாளாக இருந்தபோதிலும், ரசிகர்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவை அளித்துள்ளார்கள்.

    மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபாகங்கள் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ்  படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் நடித்து பிரம்மாண்ட வெற்றி கண்ட கர்ணன் படத்தை தொடர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    வயாகாம் கொடுத்த புகார்.. ’லால் சிங் சத்தா’ படத்தை இணையத்தில் லீக் செய்தவர்கள் கைது!

    கடந்த ஒரு ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய 4 படங்கள் ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக வெளியானது. இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் முதல் நாள் கலெக்சன் குறித்த விபரம் வெளிவந்துள்ளது. நேற்று வேலை நாளாக ரசிகர்கள் இந்த படத்தில் பெரும் ஆதரவை அளித்துள்ளார்கள்.

    ஒட்டுமொத்தமாக ரூ. 9.50 கோடியை முதல் நாளில் இந்தப் படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் திருசிற்றம்பலம் ரூ. 6 கோடி வசூலை தாண்டியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    3 குழந்தைகள்.. ஹேப்பியான லைஃப்.. வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை சிந்து மேனன்!

    நீண்ட நாட்களுக்கு பின்னர் இணைந்த தனுஷ்-அனிருத் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாகவும், படத்தில் நித்யா மேனனின் நடிப்பு நன்றாக உள்ளதென்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி