ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா…

முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா…

தனுஷ் - ராஷ்மிகா மந்தனா

தனுஷ் - ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் புதிய திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். அந்த திரைப்படம் தெலுங்கு - தமிழ் - ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    நானே வருவேன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.  அந்தப் படத்திற்கு இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து தனுஷ் கொண்டு உள்ளார்.

    இதற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது.  அதே சமயம் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் புதிய திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.  அந்த திரைப்படம் தெலுங்கு - தமிழ் -  ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.

    அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக,  நடிகர் - நடிகைகளை தேர்வு செய்யும் பணியும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    புதிய படங்களை தவிர்க்கும் நயன்தாரா… காரணம் இதுதானா?

    அதில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது.

    ஸ்கிரிப்ட் ரெடி! த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா?! விரைவில் அறிவிப்பு

    இருந்தாலும், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.  நடிகர் தனுஷ் இதற்கு முன்பு ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்ததில்லை. இதன் மூலம் தற்போது முதன் முறையாக அவர்கள் இருவரும் புதிய படத்திற்காக இணைய உள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Dhanush