முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராக்கி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

ராக்கி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

தனுஷ் படம்

தனுஷ் படம்

தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

  • Last Updated :

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். நானே வருவேன் படத்துக்குப் பிறகு இவர்கள் இணையும் படம் தொடங்கப்பட உள்ளது.

டிசம்பர் 23 வெளியான ராக்கி படம் ரசிகர்களிடையே பேசு பொருளாகியிருக்கிறது. காதல், காமெடி எதுவுமின்றி வன்முறையை மட்டும் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ராக்கி. தமிழில் இப்படியொரு படத்தை  ரசிகர்கள் அனுபவப்படுவது இதுவே முதல்முறை.ராக்கி தயாரான பிறகு அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம் படத்தை எடுத்தார். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரியில் வெளிவருகிறது. இதிலும் வன்முறைதான் பிரதானம். முக்கியமாக கீர்த்தி சுரேஷை பல பேர் சேர்ந்து வன்புணர்வு செய்யும் காட்சி அதிவன்முறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பழிவாங்கும் காட்சிகளும்.

இதையும் படிங்க.. Cook with comali 3 : முதல் ஃபோட்டோவை வெளியிட்ட கோமாளிகள்... ரசிகர்கள் குஷி!

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். தாணு படத்தை தயாரிக்கிறார்.

இதையும் படிங்க.. ஆல்யா மானசாவா? ஷபானாவா? அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகள் யார்?

இந்தப் படம் முடிந்ததும் தனுஷ் அருண் மாதேஸ்வரன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நேரடித் தெலுங்குப் படத்திலும் தனுஷ் நடிக்கயிருக்கிறார்.அருண் மாதேஸ்வரன் - தனுஷ் இணையும் படம் 2022 இன் முக்கிய படங்களுள் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor dhanush, Kollywood